1
00:00:00,000 --> 00:00:03,400
Ravi: அலோ நான் ரவி பேசுறேன்.

2
00:00:03,800 --> 00:00:05,300
Ravi: என் கூட மணி இருக்காரு.

3
00:00:05,800 --> 00:00:08,700
Ravi: இப்ப வந்து நாங்க ஈரான் அமெரிக்கா வார பத்தி பேச போறோம்.

4
00:00:10,000 --> 00:00:12,000
Ravi: மணி உங்கள இன்ட்ரடியூஸ் பண்ணிக்கங்க.

5
00:00:12,300 --> 00:00:13,600
Mani: வணக்கங்க என்னோட பேர் மணி.

6
00:00:14,600 --> 00:00:18,300
Mani: இப்போ உங்களுக்கு நல்லா தெரியும் இப்ப இந்த வார் இஸ்யூ போயிட்டு இருக்குது பெரிய அன்சர்ட்டனிட்டி இருக்கு.

7
00:00:18,300 --> 00:00:20,900
Mani: உலகம் ஃபுல்லாவே எல்லாருக்குமே ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க.

8
00:00:21,300 --> 00:00:23,200
Mani: எல்லா துறையுமே இன்னைக்கு ஸ்டக் ஆயிருக்குன்னு சொல்லலாம்.

9
00:00:23,400 --> 00:00:28,200
Mani: மிடில் ஈஸ்ட் மட்டும் இல்ல ஏசியா மட்டும் இல்ல எல்லாமே உலகம் ஃபுல்லா இது ஆயிருக்குன்னு நினைக்கிறேன். ஃபுல்லா ஸ்டக் ஆயிருக்கு.

10
00:00:28,900 --> 00:00:36,800
Mani: இதுக்கு மெயின் ரீசன் வந்து எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஈரான், இஸ்ரேல் பிளஸ் அமெரிக்கா, யுஎஸ்ஏ வந்து அவங்க எல்லாமே கோஆர்டினேட் பண்ணி பண்ணிட்டு இருக்காங்க.

11
00:00:37,700 --> 00:00:44,300
Mani: இதுல ஃபர்ஸ்ட் ஒன் வீக்ல முடிஞ்சிரும் நாங்க ஃபர்ஸ்ட் ரெண்டு வீக்ல முடிஞ்சிரும் நாங்க இப்ப ஆல்மோஸ்ட் இப்ப நம்ம வந்து 20 டேஸ் தாண்டி போயிட்டு இருக்கோம்.

12
00:00:45,000 --> 00:00:47,300
Mani: இதுல நிறைய மேன் பவர் ஸ்பெஷல் இஸ்யூஸ் இருக்கு.

13
00:00:47,900 --> 00:00:49,400
Mani: பெட்ரோல், கேஸ் எல்லாம் ஸ்டக் ஆயிருக்கு.

14
00:00:49,900 --> 00:00:53,800
Mani: வேர்ல்ட் எக்கனாமிக், ஷேர் மார்க்கெட் எல்லாமே இதுல பயங்கரமா அடி வாங்கி இருக்கு.

15
00:00:54,400 --> 00:00:56,900
Mani: இது இன்னும் எவ்வளவு நாளைக்கு போகும்ங்கறது நம்மகிட்ட தெரியல.

16
00:00:57,000 --> 00:00:59,900
Mani: டே பை டே இது இன்கிரீஸ் ஆயிட்டு தான் ஆயிட்டு இருக்கு. கொஞ்சம் கம்மியான மாதிரி தெரியல.

17
00:00:59,900 --> 00:01:02,200
Mani: இதுல எல்லாருக்குமே பெரிய பாதிப்பு இருக்கு.

18
00:01:02,400 --> 00:01:06,700
Mani: ஈரான், இஸ்ரேல், யுஎஸ்ஏ எல்லாமே பெருசா இது ஆயிருக்காங்க.

19
00:01:06,900 --> 00:01:09,900
Mani: சோ அதை பத்தி அவர் ரவி என்ன நினைக்கிறாருங்கறத அவர்ட்ட கேட்கலாம்னு இருக்கேன்.

20
00:01:10,400 --> 00:01:11,300
Mani: சொல்லுங்க ரவி நீங்க சொல்லுங்க.

21
00:01:11,500 --> 00:01:16,300
Ravi: இல்ல நான் நான் என்ன நினைக்கிறேங்கறத விட நீங்க உங்களை வந்து பர்சனலா இந்த வார் எப்படி பாதிச்சிருக்கு?

22
00:01:16,700 --> 00:01:26,700
Mani: இப்ப நம்ம வந்து நான் ஏன்னா நாங்க எஸ்பெஷலி பிரச்சனை நடக்குற இடத்துலயே இருக்கறதுனால டே பை டே ஒரு ஒரு நாள் எங்களுக்கு வந்து சத்தம் கேட்குது. சைரான் இஸ்யூ கேட்குது. சைரான் கேட்கறதுனால சரியா சாப்பிட முடிய மாட்டேங்குது. ஒரு பெரிய பேனிக் கிரியேட் பண்ணிருக்கு.

23
00:01:26,800 --> 00:01:30,900
Mani: ஃபேமிலிக்கும் அவங்களும் அங்க இந்தியால இருந்துட்டு எல்லாம் ரொம்ப பயந்துட்டு இருக்காங்க.

24
00:01:31,200 --> 00:01:36,700
Mani: எங்களுக்கு இங்க வந்து பொல்யூஷன்ல இருந்து நம்மளோட அட்மாஸ்பியரும் ரொம்ப பாதிப்பான மாதிரி இருக்கு.

25
00:01:37,000 --> 00:01:38,700
Mani: ஏன்னா இங்க ஆயில் ரெஃபரரி அடிச்சிருக்காங்க.

26
00:01:39,000 --> 00:01:43,400
Mani: டெலிகம்யூனிகேஷன் செக்டார், பேங்கோட ஹெட் ஆபீஸ், ஹெட் குவார்ட்டர்ஸ் எல்லாமே அடிச்சிருக்காங்க.

27
00:01:44,000 --> 00:01:47,200
Mani: அது மாதிரி வந்து சின்ன இப்ப பிளைட் ஃபுல்லா பர்ன் ஆயிருக்கு.

28
00:01:47,600 --> 00:01:51,900
Mani: அதாவது இடையில நம்ம ஊருக்கு போனா கூட இப்ப எல்லாமே ஏர்போர்ட் எல்லாம் ஃபுல்லா லாக் பண்ணிருக்காங்க.

29
00:01:52,300 --> 00:01:53,700
Mani: ஏர் ஸ்பேஸ் எல்லாம் லாக் பண்ணிருக்காங்க.

30
00:01:54,300 --> 00:01:58,900
Mani: ஒரு எதுவுமே ஊர்ல இருந்து போக முடியல, வர முடியல. அங்க இருந்து ஒரு எந்த ஐட்டமுமே இங்க வரல.

31
00:01:59,500 --> 00:02:03,900
Mani: சோ அன்றாட லைஃப் வந்து நார்மலா இருந்த விட ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்குன்னு தான் சொல்லணும்.

32
00:02:04,600 --> 00:02:04,900
Mani: சொல்லுங்க.

33
00:02:06,000 --> 00:02:14,500
Ravi: இது எங்க எங்க போய் முடியும்னு நினைக்கிறீங்க? எவ்வளவு நாள்ல முடியும்னு நினைக்கிறீங்களா இல்ல கண்டினியூ ஆகும்னு நினைக்கிறீங்களா? இப்போதைய சூழ்நிலையை வச்சு நீங்க என்ன நீங்க என்ன நினைக்கிறீங்க?

34
00:02:15,000 --> 00:02:20,700
Mani: இப்ப இருக்கிறதை பார்த்தா டே பை டே இதுவும் நமக்கு நின்னு போயிடும்ங்கிற ஒரு பாசிட்டிவ் நியூஸ் எதுவும் வர்ற மாதிரி இதுவரைக்கும் தெரியல.

35
00:02:21,000 --> 00:02:23,500
Mani: நான் பெருசா பெருசா ஈகோ பிரச்சனையா என்னங்கறதும் தெரியல.

36
00:02:23,900 --> 00:02:29,500
Mani: இவங்க சைடுல இருந்து டெய்லி வந்து நெகட்டிவ் நியூஸ் தான் வருது. யுஎஸ்ஏ சைடுல இருந்து டெய்லி நெகட்டிவ் நியூஸ் தான் வருது.

37
00:02:30,000 --> 00:02:32,000
Mani: எந்த சைடுல இருந்தும் ஒன்னும் நிக்கிற மாதிரி தெரியல.

38
00:02:32,400 --> 00:02:35,700
Mani: நடுநிலமையா இருக்கிற நாடுகளும் எல்லாமே அவங்க அவங்க சைலென்ட்டா இருக்காங்க.

39
00:02:35,900 --> 00:02:40,000
Mani: யாருமே இதை எடுத்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு பேசுவோம் நிறுத்துவோம்ங்கற மைண்ட் செட்ல யாருமே கிடையாது.

40
00:02:40,500 --> 00:02:47,600
Mani: சோ இப்ப முடியும் என்னட என்ன பொறுத்தவரைக்கும் இது வந்து எண்ட் ஆகுமோ வெறும் வகையில ஒன் வீக்லயோ இல்ல 10 டேஸ்லயோ முடியும்னு சொல்ற மாதிரி எதுவுமே கிடையாது.

41
00:02:48,000 --> 00:02:49,400
Mani: இது எங்க போய் முடியும்னு தெரியல.

42
00:02:49,600 --> 00:02:52,300
Mani: இப்போதைக்கு இருக்கிறது முடியற மாதிரி எனக்கு தெரியல அவ்வளவுதான் சொல்ல முடியும் இதுல.

43
00:02:53,200 --> 00:02:53,700
Ravi: சூப்பர்ங்க.

44
00:02:54,500 --> 00:03:02,300
Ravi: இப்ப நாம வந்து என்ன பண்ணனும் நம்ம கையில எதுவும் இல்ல. அதனால இப்ப எப்படியாவது வார் சீக்கிரம் முடியணும்னு கடவுளை வேண்டிக்கிறோம்.

45
00:03:02,500 --> 00:03:03,700
Mani: ஆமா நானும் அதேதான் வேண்டிக்கிறேன்.

46
00:03:04,200 --> 00:03:06,500
Mani: நம்ம கையில எதுவும் இல்லனாலும் நம்ம சேஃப் செக்யூரா இருப்போம்.

47
00:03:07,000 --> 00:03:11,100
Mani: நெகட்டிவிட்டி ஸ்ப்ரெட் பண்ணாம பாசிட்டிவிட்டியா ப்ரே பண்ணுவோம். கடவுளையும் ப்ரே பண்ணுவோம்.

48
00:03:11,200 --> 00:03:12,900
Mani: இது வெகுவிரைவில் முடியணும்னு நம்ம வேண்டிக்கிறோம்.

49
00:03:13,100 --> 00:03:14,000
Mani: அதுதான் நம்ம சொல்ல முடியும்.

50
00:03:14,400 --> 00:03:14,900
Mani: தேங்க்யூ.

51
00:03:15,400 --> 00:03:16,600
Ravi: ஓகேங்க நன்றி தேங்க்யூ.

52
00:03:17,300 --> 00:03:17,600
Mani: ம்.

53
00:03:18,400 --> 00:03:19,000
Mani: இப்ப இது என்ன பண்ணனும்.

